Pages

Friday, 5 October 2012

மனம் ஒரு காடு

பொக்கிஷம் என்றதும் தங்க  நாணயங்களும் ,ஆபரணங்களும் , விலை  மதிக்க இயலாத பொருட்களும் அடங்கிய புதையல் இருக்கும் என நினைத்து வந்திருக்கும் உங்களை ஒரு போதும் ஏமாற்றபோவதில்லை நான்

நிச்சயம் இது பொக்கிஷம் அடங்கிய பெட்டிதான் திறந்து பாருங்கள் உள்ளே உணர்வுகளின் பொக்கிஷம் அடங்கி கிடக்கிறது அதை பார்த்ததும் உங்களால் பரவச நிலையை அடைய முடியும் மகிழ்ச்சியின் எல்லையை தொட முடியும்
ஒரு குழந்தையை போல குதூகலிக்க  முடியும்.


நமக்குள் புதைந்து இருக்கும் நாம் இன்னும் அறியாத பல பொக்கிசங்களை உங்களுக்கு திறந்து காட்டவே நான் தலைபடுகிறேன்

மனம் ஒரு காடு 

நம் மனம் என்பது பெரும் காடு அந்த காட்டில் இருக்கும் அதிசயங்களை பார்க்க போகிறோம்  அந்த காட்டுக்குள் இருக்கும் அனைத்திலும் உயிர்ப்பு இருக்கும் அந்த உயிர்ப்பை இதுவரை நாம் உணரவில்லை என்றாலும் இனி உணரலாம் .

துடிப்புடன் இருக்கும் மனிதனிடம் உயிர்ப்பு இருக்கும் ,அன்பு இருக்கும் ,புன்னகை இருக்கும் ,கருணை இருக்கும் , மனித நேயம் இருக்கும் ,அவனுடைய நாக்கில் இனிமை இருக்கும் , கைகளில் ஈகை இருக்கும் ,கால்களில் உழைப்பு இருக்கும் .

இவை அனைத்தும் இல்லாதவனிடம் அறிவு இருந்தாலும் அவன் வெறும் மரக்கட்டை போலதான் காரணம் அவனிடம் மனித பண்புகள் தலைத்தொங்கி இருக்க முடியாது ஒரு கட்டை ,மரம் ஆக வேண்டும் என்றால் அது வேர் விட்டிருக்க வேண்டும் தன்னைச் சார்ந்திருக்கிற சமுதாயத்தோடு, பிடிப்புகளோடு வேர்களை விரித்து அதிலிருந்து சாரத்தை உறிஞ்சி மனித இயல்புகளோடு காய்த்து குலுங்க வேண்டும் .அப்படி வேர் விடாத மனிதன் ஒரு அலங்கார பொருளாக மாறிவிடுவான் ..

அவன் வாழும் காலத்திலே நிராகரிக்க படுவான் அவன் இறந்த பின்பும் மண் அவன் உடலை மட்கச் செய்வதில் தீவிரம் காட்டும். காதற்று கூட அவன் கல்லறையின் பக்கம் வீசாது எங்கே அவன் சவ பெட்டியை திறந்து வெளியே வந்துவிடுவானோ என்று அச்சம் கொள்ளும் .

ஆகவே வாழும் நாட்களில் நம் மனதை மற்றவர்களுக்கு அன்பு செலுத்தவும் ,இரக்கம்  கொள்ளவும் ,மனித நேயத்துடன் நடப்பதுமே நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்லும் பொக்கிசமாகும் .


4 comments:

  1. புதிய பொக்கிசம் ...முதல் மாணவனாய்...

    ReplyDelete
  2. பொக்கிஷம் பொக்கிஷமாக இருக்கு...

    ReplyDelete
  3. Dear Author Pls remove word verification...

    ReplyDelete
  4. பொக்கிஷப் பெட்டியிலிருந்து பொக்கிஷங்களை அள்ளிக் கொள்ள நானும் தயாராய் காத்திருக்கின்றேன்.

    ReplyDelete