Pages

Friday, 12 October 2012

தங்கத் தாலி

வீட்டில் தொலைகாட்சியை பார்த்துகொண்டு அதில் வரும் பாடல்காட்சிகளுக்கு   என்னையே நாயகியாக நினைத்துகொண்டு ஆடுவதும் பாடுவதுமே என் வேலையாக இருந்த நாள்கள் அவை .அம்மாவும் என்னை திட்ட மாட்டா மாறாக என் நடனத்தையும் என் அசைவுகளையும் தூரமாக நின்று ரசித்து கொண்டிருப்பாள் அவள் ரசிக்கிறாள் என்பதை அறிந்த மறு கணம் எனக்குள் புது உத்வேகம் வந்து விடும் .

எனக்கு முடி நீளமாக இல்லாத குறையை அம்மாவின் கிழிந்த சேலை துணி தீர்த்து வைத்தது ....அந்த துணியை தலையில் வண்டு கட்டிக்கொண்டு கீழே தொங்க விட்டு அதில் பூவை வைத்து அலங்காரம் செய்து  நான் நடக்கும் போது  எனக்கு பெருமையாக இருக்கும் ..

முத்தாரம் டீச்சர் அப்படிதான்  இருப்பாங்க அவங்க நடையில் ஒரு கம்பீரம் இருக்கும் யாருக்கும் பயப்படமாட்டாங்க .அவங்க பேசும் போது  எதிர்த்து பேச வாய் வராது .முடியில் என்னை வைத்து நேர்த்தியாக பின்னி இருப்பாங்க எப்போதும் அவர்கள் வீட்டு தோட்டத்தில் வளர்ந்த பட்டர் ரோஜாவை தலையில் வைத்திருப்பாங்க .சேலையின் முந்தானையை இடுப்போடு இழுத்து சொருகி அந்த இடத்தில சாவி கொத்து ஒன்றை சொருகி வைத்திருப்பாங்க .

நானும் அவங்களை போல இருக்க வேண்டும் என்று பல தடவை நினைத்து இருக்கிறேன் அதன் பாதிப்பு தான் இப்போதெல்லாம் எல்லோரையும் அதிகாரம் செய்வது போல நடப்பதும் , தங்கையை மிரட்டுவதும் என்று பல கோணங்களில் வெளிப்படுகிறது 

படிப்பில் கெட்டி காரிதான் நான் எதை சொன்னாலும் மறுக்காமல் செய்யும் வேலைக்காரியும் கூட அதனால்தான் முத்தாரம் டீச்சருக்கு என்னை ரொம்ப பிடிக்கும் போல ஏதாவது வேலை என்றால் உடனே சாதனா இங்க வாம்மா என்று அழைத்து அவர்கள் வீட்டு சாவியை கொடுத்து மறந்து வைத்து விட்டு வந்த மூக்கு கண்ணாடி முதல் தாலி கொடி  வரை என்னை எடுத்து  வர சொல்லுவார்கள் .

"தாலிக்  கொடி  என்றதும் தான் நினைவிற்கு வருகிறது அது ஒரு சுவாரசியமான கதை டீச்சரோட கணவர் கருப்பையா வாத்தியார் அவர் எனக்கு தாத்தா முறையாகிறது தூரத்து சொந்தம் எப்ப வீட்டுக்கு போனாலும் "வாடி சக்களத்தி " அப்படின்னு கூப்பிடுவார் எனக்கு கோபமா வரும் "இருங்க எங்க அப்பாகிட்ட சொல்லுறேன்" என்று கோவமாக சென்றுவிடுவேன் ஆனால் அவரோ ரோசத்தை பாரு அப்படின்னு சிரிப்பாரு ..இது அடிகடி நடக்கிற நிகழ்வுதான் ஆனால் அன்னைக்கு டீச்சர் என்கிட்டே சாவி கொத்தை கொடுத்து "வீட்டுக்கு போய்  பீரோவை திறந்து உள்  அறையில் ஒரு சங்கிலி இருக்கும் அதை எடுத்து உன் கழுத்தில் போட்டு கொண்டு வீட்டை பூட்டி விட்டு வா " என்று சொன்னார்கள் .

நானும் எப்போதும் போல மறந்து வைத்துவிட்டு வந்துட்டாங்க போல அதுதான் எடுத்து வர சொல்லுறாங்க என்று அதை கழுத்தில் போட்டு சட்டைக்குள் மறைத்து வைத்து கொண்டு அவர்களிடம் கொடுத்தேன் .அவர்களும் வாங்கி கழுத்தில் போட்டு கொண்டார்கள் .அதன் பின் ஒரு மாலை நேரம் நானும் என் அம்மாவும் அவர்கள் வீட்டு வழியாக போய்கொண்டிருந்தோம் அப்போது வாசலில் அமர்ந்திருந்த முத்தாரம் டீச்சர் அம்மாவை அழைத்து பேசிகொண்டிருந்தார் . நானும் தோட்டத்தில் உள்ள ரோஜாக்களை பறித்து கொண்டு இருந்தேன் அப்போது உள்ளிருந்து வந்த கருப்பையா தாத்தா என் அம்மாவை பார்த்து நலம் விசாரித்து விட்டு உன் பெண்ணை நான் சக்களத்தி என்று சொல்லுவது எவ்வளவு உண்மை ஆகிப்போனது தெரியுமா ? என்று கேட்டார் நானும் என் அம்மாவும் அவரை கேள்வியோடு பார்த்தோம் அப்போது அவர் சொன்னது எனக்கு தூக்கிவாரி போட்டது .


அவர் பேச்சை தொடர்ந்தார் "என் பொஞ்சாதி தாலியை உம் பொண்ணு போட்டுகிட்டா அதுக்கு  என்ன அர்த்தம் நீயே சொல்லு என்று கேட்க ? டீச்சர் சிரித்துகொன்டே அன்று வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்த சங்கிலியை எடுத்து வந்த கதையை அம்மாவிடம் சொல்ல எல்லோரும் சிரிகிரார்கள் என்னைத்தவிர .

இந்த சம்பவங்கள் நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது  நடந்தது ஆனாலும் என் மனதின் போக்கிச அறைக்குள் பாதுகாப்பாய் இருக்கிறது .
5 comments:

 1. சாதனாவின் பொக்கிஷம் அருமை...

  ஒவ்வொருவருக்கும் ஒரு பொக்கிஷம் மனதில் நிச்சயம் இருக்கும்...

  சக்களத்தி என்று அவர் சொன்னதை குறும்பா உங்க கோபத்தோடு சொல்லிய விதம் அருமை...

  உங்க எழுத்துக்கள் தொலைக்காட்சி நாயகி போல் உங்களுடனே கைபிடித்து அழைத்து செல்கிறது...

  நீங்க நிறைய எழுதியது போல் உள்ளது உங்கள் எழுத்து... வேறு முகம் கொண்டு எழுதுகிறீர்கள் தொடருங்கள் இப்பணியை அப்பத்தான் எங்களுக்கு நிறைய பொக்கிஷம் கிடைக்கும்....

  ReplyDelete
 2. மனதில் உறங்கும் அழகிய
  நினைவுகளின் அழகிய பொக்கிஷம்

  ம்ம்ம் .அருமை

  ReplyDelete
 3. சாதனாவின் சிறுவயது நினைவுப் பொக்கிஷத்திலிருந்து எடுத்துக் காட்டிய இந்த முத்து அழகோ அழகு. அந்த மனிதரின் குறும்பும் கடைசியில் எல்லாரும் சிரித்தார்கள் என்னைத் தவிர என்று நீங்கள் முடித்திருக்கும் விதமும் நன்று. பொக்கிஷங்கள் தொடரட்டும்.

  ReplyDelete
 4. நிச்சயமாக இது பொக்கிஷம் தான்
  சிறுவயது நினைவுகளை மீட்கும் போது ஏற்படும் இனிமையும் (நகைப்பும்) நிச்சயமாக பொக்கிஷமாக கருதப்பட வேண்டியவைகள் தான்.

  பொக்கிஷத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

  ReplyDelete
 5. மிக அருமையான பதிவு
  வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
  உங்கள் வரவை விரும்புகிறது.
  தினபதிவு திரட்டியின் சிறப்பு தினமும் பதிவர் பேட்டி
  தினபதிவு திரட்டி

  ReplyDelete