Pages

Thursday 18 October 2012

அர்ச்சுனா அர்ச்சுனா

அது ஒரு மழை நாள் வெளியே வரமுடியாதபடிக்கு மின்னலும் இடியும் எங்களை அச்சுறுத்திக்கொண்டு  இருந்தது பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க மின்னலை பார்த்தால் கண்ணு தெரியாமல் போய்விடும் என்று அதனால் மின்னல் ஒளி வரும்போதெல்லாம் கண்ணை மூடிக்கொண்டாலும் ஓரக்கண்ணால் பயந்து பயந்து பார்ப்பதும் உண்டு ..இடியும் அப்படிதான் நம்மீது விழுந்தால் நாம் எரிந்து சாம்பலாகிவிடும் என்று சொல்லுவாங்க அப்படி விழாமல் இருக்கு சில மந்திரங்களை எனக்கு சொல்லி கொடுத்தாங்க

அதுதான் "அர்ச்சுனா அர்ச்சுனா " இந்த மந்திரத்தை ஓயாமல் சொல்லிக்கொண்டு இருந்தால் இடி நம்மீது விழாமல் நம்மை கடந்து போய் விழும் இனி நீங்களும் கூட சொல்லுங்கள் இது நாள் வரை என் மீது இடி விழுந்ததே இல்லை இந்த மந்திரத்தின் மகிமைதான் அது.

சரி சொல்ல வந்ததை மறந்துவிட போகிறேன்  அன்னைக்கு என்ன  நடந்தது தெரியுமா ?
நானும் அக்காவும் பக்கத்துக்கு வீட்டு ஜெயந்தியும் சுரேஷும் விடுமுறை என்பதால் ஒன்றாக எங்கள் வீட்டில் இருந்தோம் அம்மா அப்பா வேலைக்கு சென்றுவிட்டார்கள். நாங்கள் இருப்பது மலை பிரதேசம் என்பதால் குளிர் கொஞ்சம் கடுமையாக இருக்கும் என்பதால் கட்டிலுக்கு அடியில் ஒரு இரும்பு தட்டில் அனலை வைத்து விட்டு செல்வார்கள் அதன் கதகதப்பில் கொஞ்சம்  குளிரை விரட்ட முடியும் என்பதால் .அந்த அனல் எப்போதும் இருக்குமாறு எங்களில் யாராவது ஒரு இரும்பு குழல் கொண்டு ஊதிகொண்டிருப்போம் .
அன்று அப்படித்தானே ஊதி விளையாடிக்கொண்டு அம்மா வறுத்து கொடுத்து சென்ற கொண்டை  கடலை, கோதுமை அனைத்தையும் காலி செய்து கொண்டிருந்தோம் .

அன்று இரண்டாவது  சனிகிழமை என்பதால் பொதிகையில் திரைப்படம் ஒலிப்பரப்புவார்கள் என்பதால் ஆர்வத்துடன் காத்திருந்தோம் .சிறிது நேரத்திற்கெல்லாம் படம் ஒளிபரப்பானது தலைப்பு போட ஆரமித்ததும் அனைவரும் தொலைகாட்சியை உற்றுநோக்கினோம் அப்பொழுதுதான் அந்த நடுக்கம் எனக்குள் படத்தின் ஆரம்பம் அரக்கர்களின் கொடுரமான முரசு அறையும் சத்தத்தோடு ஆரமித்து நீண்டநேரம் அந்த காட்சி ஓடிகொண்டிருந்தது  மனம் முழுதும் ஒரு வித அச்சம் குடிகொண்டு ஓடி போய்  ஜன்னல் கதவு அனைத்தையும் திறந்து வைத்து விட்டு வந்து அமருகிறேன் அக்கா  திட்டுகிறாள் "வெளியே மழை  பெய்கிறது ஏன் கதவை திறக்கிறாய் சாத்திவிட்டு  வா " என்று " எனக்கு பயமாக இருக்கிறது" என்கிறேன் நாங்கள் இத்தனை பேர் இருக்கிறோம் உனக்கு என்ன பயம் என்று சொல்லி கொண்டு கதவை சாத்துகிறாள். மீண்டும் அதே காட்சி படம் பார்க்க பிடிக்காமல் போர்வையை தலையோடு போர்த்தி கொண்டு காதடைத்து உட்கார்ந்துகொண்டேன் சிறிது நேரத்தில் இனிமையான ஒரு பெண்ணின் குரல் அப்பொழுதான் ஜீவன் வந்தது போல போர்வை விலக்கி பார்கிறேன் நடிகை சாவித்திரி நடித்த திருவிளையாடல் படம் அது இப்போது கொஞ்சம் சகஜ நிலைக்கு வந்துவிட்டேன் .மற்றவர்கள் எல்லாரும் ரசித்து பார்க்கிறார்கள் அவர்களோடு நானும் ரசிக்கிறேன் படத்தை .

ஆனாலும் அந்த படத்தின் முதல் காட்சி  என் மனதை  விட்டு அகலாமல் ஒரு பயத்தை உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறது ஒவ்வொருமுறையும் அந்த படம் சம்பத்தப்பட்ட காட்சிகளையோ ,பெயர்களையோ பார்க்க நேர்கையில் விடை தெரியாத புதிர் போல அந்த பயம் வந்து போகிறது .


3 comments:

  1. மிக மிக இயல்பாக உங்களின் பால்ய அனுபவத்தை பகிர்ந்திருக்கிறீர்கள். எனக்கும் இதுபோன்ற அனுபவம் ஒன்றல்ல சில உண்டு. நான் மீண்டு வர நாளானது. ரசனையான பகிர்வு. அருமை.

    ReplyDelete
  2. ஹ..ஹ..ஹ..ஹ...ஹா...
    இடி என்றால் பலருக்கு ஒருவித பயம் இருக்கும்.

    மிகவும் எதார்த்தமான பதிவு. அருமை.

    ReplyDelete
  3. மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்..
    நீங்க நினைவுகள் தான்
    ஆனாலும் ஒரு விடயம் நீங்க உங்க பாட்டுக்கு மந்திரத்த சொல்லி இடியில இருந்து தப்பிடுவீங்க அது மந்திரம் சொல்லாத உங்க பக்கத்துல் இருந்தவங்க மீது விழுந்தா என்ன பண்ணுவீங்க..... :)

    ReplyDelete