Pages

Sunday, 28 October 2012

பள்ளி விடுதியில் ஒரு நட்பு

சில நாட்கள்  விடுதியில் தங்கி படிக்க நேர்ந்தது .அந்த அனுபவம் புதுமை ஆரம்பத்தில் அம்மா,அப்பா, தங்கை ,தோழிகள் வீடு ,ஊரு அந்த மலை பிரதேசத்தின் அருவிகள் என அனைத்தையும் விட்டு விட்டு நகரத்தில் ஒரு நரகம் போல இருந்தது விடுதி வாழ்க்கை .ஆனால் இவை அனைத்தும் சில நாட்கள்தான்.

பள்ளி தொடங்கியதும் காலையில் எழுந்து அவரவர் குளித்து தலைசீவி கிளம்பி கொண்டு இருந்தார்கள் எனக்கு எப்போதும் அம்மாதான் தலை சீவி விடுவாள் இப்போது திடுமென நானே சீவுவது என்றால் எனக்கு பெரிய காரியமாக தெரிந்தது.  சீப்பையும்  ரிப்பனையும் எடுத்துகொண்டு நேராக  வளர்மதி அக்கா முன்னாடி நின்றேன் அவள்தான் என்னை பார்த்ததும் எந்த ஊரு என்ன படிக்கிற என்று சிரித்த  முகத்துடன் விசாரித்தால் அதனால் " எனக்கு தலை வாரி  விடுங்களேன் ? என்று கெஞ்சி கொஞ்சி கேட்டேன் சிரித்துக்கொண்டே "சரி வா சீக்கிரம் உட்காரு என்று என்னை மரபெஞ்சில் உட்கார வைத்து மட மடவென தலை முடியை இரண்டாக பிரித்து சீவி பின்னி பின்னலின் அடியில் ரிப்பனை வைத்து  முடியோடு சேர்த்து பின்னி ஒரு முடிச்சை போட்டு அதை அப்படியே பின்புறமாக மடக்கி இறுக்கி கட்டி ஒரு முடிச்சுக்குள் பூவை போல அழகாய் பிரித்து வைத்தால் .விரைவாக அவள் பின்னியதை பார்க்கும் போது  வியப்பாக இருந்தது எனக்கு . இரட்டை சடை பச்சை பாவாடை ,வெள்ளை சட்டை என என்னை பார்க்க வேறு யாரோ போல இருந்தது .


அதன் பின் எப்போதும் போல எல்லோரும் தட்டை எடுத்துகொண்டு சாப்பாட்டு அறைக்கு சென்றோம் தட்ட பயறும் தக்காளியும் சேர்த்து ஒரு புதுவித கூட்டாஞ்சோறு இரண்டு உருண்டையும் அதற்க்கு வெள்ளை கலரில் ஒரு தண்ணீரையும் ஊற்றினார்கள் .அந்த வெள்ளைத்  தண்ணீர்தான் மோர் என்று பின்னாளில் தெரிந்துகொண்டேன் .அன்று முதல் முறை உண்ணும் போது  அந்த உணவு சுவையாக இருந்தது. அதற்க்கு அடுத்த தினங்களிலே அது புளித்துபோனது.

விடுதியில் இருந்து பள்ளி ஒரு கிலோமீட்டர் தூரம்  நடந்து போகவேண்டும் பேசிக்கொண்டே போகும் போது கலாவை எனக்கு ரொம்ப பிடித்தது அவளுக்கும் என்னை பிடித்தது. வழியெங்கும் சோளக்காடு வரும்போது கதிரை பறித்து சாப்பிடலாம் என்று இருவரும் பேசிசிக்கொண்டோம் .

அதன் பின் இருவரும் மதிய இடைவேளையில் மட்டும் பேசிக்கொள்வோம் மீண்டும் பள்ளி முடித்து விடுதி திரும்பும் போது  இருவரும் சேர்ந்தே வந்தோம் அதன் பின் எனக்கு விடுதி பற்றிய பயம் குறைந்து போனது .

இரவு உறங்கும் பொது மீண்டும் ஒரு பயம் கவ்விகொண்டது தனித்து உறங்க வேண்டுமே அம்மா அருகில் இல்லையே என்று கிட்ட தட்ட அழுகையே வந்துவிட்டது என்னுடைய பெட்டி இருக்கும் இடத்தில்  படுத்துக்கொண்டேன் உறக்கம் வர வெகு நேரமாகிவிட்டது .உறங்கியபின்பும் பயமுறுத்தும் கனவுகள்  கனவில் நான் மட்டும் தனியாக ஒரு வனாந்திரத்தில் அரக்கர்களுக்கு மத்தியில்  இருப்பது போல எல்லோரும் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்ட நிலையில் என்னை அரக்கர்கள் அரிவாளால் வெட்ட வருவது போல பல கனவுகள் வந்து பாடாய்  படுத்தியது .அதுதடுத்த இரவுகளில் நான் காலா அருகில் உறங்கினேன் கனவுகள் குறைந்து போனது .

(அந்த நாட்களின் நினைவு நிறைய இருக்கிறது அடுத்ததடுத்த பதிவில் வாசிக்கலாம் .தொடர்ந்து என் தளத்திற்கு வருகை தந்து என் எழுத்தையும் படித்து கருத்து சொல்லும் உங்களுக்கு என் நன்றிகள் பல .)


3 comments:

 1. ஹ்ம்ம்ம்.... பொக்கிஷமான அனுபவம். நல்லாருக்கு.

  ReplyDelete
 2. சுவாரஸ்யமான நினைவுகள்.(இப்போது பின்னிக்கொள்ளத் தெரியுமா?:)

  ReplyDelete
 3. பொக்கிஷத்தை அழகாக பதிந்துள்ளீர்கள்....

  தாயன்புக்காக ஏங்கும் பலர் இன்னமும் விடுதிகளில்....
  இதுவே இப்போதைய நாகரீகமாக இருக்கிறதான் அவலம்

  ReplyDelete